Home
Tamilnattu Selvam

Tamilnattu Selvam in Bloomington, MN
Current price: $13.99
Loading Inventory...
Size: OS
உங்கள் சங்கத்தின் ஆறாம் அண்டு விழாவிற்கு என்னைத் தலைமை வகிக்குமாறு விரும்பி அழைத்ததற்குப் பெரிதும் நன்றியறிதலுடையேன். இரண்டாம் ஆண்டு விழாவிற்கு ஈண்டுப்போந்து தலைமை வகித்துப் பேசியபோது எனக்கிருந்த உடல் உரம் இப்பொழுது இல்லாமை குறித்து வருந்துகிறேன். எனது உடல் நிலைகருதி மறுத்து விடலாமா என்றும் எண்ணினேன். ஆனால் எனது வருகையால் சிறிது நலம் விளையும் என்று ஈண்டுள்ள அன்பர்கள் எழுதிய கடிதங்களைக் கண்டு இத்தொண்டை இயன்ற வரை புரிய ஒருப்பட்டேன். நீங்கள் எதிர்பார்த்த வண்ணம் என்னால் பேச இயலாமையை உங்களுக்கு முதலில் அறிவித்துக் கொள்ளுகிறேன். ஆதலால்என்பால் நிகழும் குற்றங் குறைகளை மன்னிக்குமாறு வேண்டுகிறேன்.