The following text field will produce suggestions that follow it as you type.

Ilangai Irudhi Yudham / ?????? ????? ???????
Ilangai Irudhi Yudham / ?????? ????? ???????

Ilangai Irudhi Yudham / ?????? ????? ???????

Current price: $17.99
Loading Inventory...
Get it at Barnes and Noble

Size: OS

Get it at Barnes and Noble
இலங்கையின் கடந்த இருபத்தைந்து ஆண்டு கால வரலாறு எண்ணற்ற மோதல்களாலும், படுகொலைகளாலும், குண்டுவெடிப்புகளாலும், ராணுவ நடவடிக்கைகளாலும் மட்டுமே நிறைந்துள்ளது. தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காக நடைபெற்ற நீண்ட போராட்டத்தின் விளைவே விடுதலைப் புலிகள் இயக்கம். புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு நடத்திவந்த போர், மகிந்த ராஜபக்ஷேவின் வருகைக்குப் பிறகு புது வடிவம் கொண்டது. ராஜபக்ஷேவும், மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்ட ராணுவத் தலைமைத் தளபதி சரத் ஃபொன்சேகாவும் புதிய செயல்திட்டத்துடன் கரம் கோர்த்துக்கொண்டனர். இருபத்தைந்து ஆண்டுகளில் ஈட்ட முடியாதிருந்த வெற்றி, 33 மாதங்களில் சாத்தியமாகியுள்ளது. நெருங்க முடியாத நெருப்பாக இருந்து வந்த வேலுப்பிள்ளை பிரபாகரன் வீழ்த்தப்பட்டார். விடுதலைப் புலிகள் இயக்கம் சிதறடிக்கப்பட்டது. இலங்கையின் இனப் போராட்ட யுத்தமும், ரத்த வரலாறும் முடிவுக்கு வந்திருக்கிறது. ஈழம் என்னும் கனவும்கூட! இறுதி யுத்தம் நடைபெற்ற தருணங்களை நேரில் பார்த்து, பலரை பேட்டி கண்டு, சார்பில்லாத தொனியில் இந்தப் புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார் நிதின் கோகலே. இந்தியாவின் முதன்மை செய்தித் தொலைக்காட்சியான NDTV--யின் ராணுவ, பாதுகாப்பு விஷயங்கள் தொடர்பான ஆசிரியர் இவர். இலங்கையின் ராணுவத் திட்டங்களை விளக்கமாக விவரிக்கும் இந்தப் புத்தகம் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கான காரணங்களையும் நுணுக்கமாக ஆராய்கிறது. இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள்: ஜெயமோகன் - 07-02-10 ஆதிஷா - 02-03-10
Powered by Adeptmind